புதன், 25 பிப்ரவரி, 2015

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் அறிமுகம்..!!

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.  பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் பௌத்த மதப் பாதுகாப்பு தொடர்பிலான சட்டங்களும் உள்ளடக்கப்பட உள்ளது.

விகாரைகள், தேவாலயங்கள் சட்டம், பௌத்த பிரசுர நியமன சட்டம், புதிய மத வழிபாட்டுத்தலங்களை அமைத்தல் மற்றும் சில் மாதாக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளது.

பௌத்த பிக்குகளுக்காக தனியான பௌத்த பிக்கு நீதிமன்றமொன்று அமைக்கப்படும். இந்த நீதிமன்றிற்காக ஓய்வு பெற்ற நீதவான்கள் நியமிக்கப்பட உள்ளனர்.



பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அட்டபிரிகர என்னும் அன்பளிப்புப் பண்டங்கள் மற்றும் பௌத்த கொடி தொடர்பில் தர நிர்ணயங்கள் பேணப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளித்த பௌத்த பிக்குகளுடன் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்த பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய பௌத்த சட்டங்கள் அறிமுகம் குறித்து அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக