இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு மங்கள சமரவீர சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயர் அதிகாரியொருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக