வியாழன், 26 பிப்ரவரி, 2015

வரிக்குறைப்பு அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு நிதி அமைச்சர்..!!

குறைக்கப்பட்ட வரியின் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நிதி அமை;சசர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சில வகை வாகனங்களுக்கான வரியை குறைத்திருந்தது.

வாகன என்ஜினின் வலு 1000ற்கும் குறைந்த வாகனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு பாரியளவில் நன்மைகள் கிடைக்கும்.


எனினும் ஒரு சில நிறுவனங்கள் இந்த சலுகையை வழங்குவதில்லை, சிறு தொகையை மட்டும் குறைத்து வழங்குகின்றன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உரிய முறையில் மக்களுக்கு வாகன வரிக் குறைப்பு நலனை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக