புதன், 25 பிப்ரவரி, 2015

அமைச்சுப் பதவியிலிருந்து விலகி வாகனங்களையும் ஒப்படைத்தார் ராஜீவ விஜேசிங்க...!!!

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க, உயர்கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகி வாகனங்களையும் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாம் பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களையும் நேற்று ஒப்படைத்துள்ளார்.

அமைச்சு விவகாரங்களில் தேவையற்ற தலையீடு மேற்கொள்ளப்படுவதனால் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்ததாக ராஜீவ விஜேசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசீம் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

எனினும், இந்த உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.


இதனால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்தேன்.

எதிர்காலத்தில் ஏதேனும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வேன்.

அல்லது தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர்ந்தும் கடமையாற்றுவேன்.

நல்லாட்சியை ஏற்படுத்தவே நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். அந்த அர்ப்பணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ராஜீவ விஜேசிங்க குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக