சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அவரது தங்கையான திலினி சில்வாவுடன் கலந்து கொண்டதுடன் இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுக்க கடும் முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதனை தவிர துமிந்த சில்வா, அமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சித்த போதிலும் அதுவும் நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த விருந்துபசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் கலந்து கொண்டதுடன் அவருடன் எவரும் உரையாடவில்லை.
இந்த விருந்துபசாரம் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரின் அழைப்பில் பேரில் நடந்தது.
துமிந்த மற்றும் சஜின்வாஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஹெரோயின் மற்றும் கடும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக