அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வாலுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் யோசனை எதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு விசாரணைக்கு உரமூட்ட வேண்டியது அவசியம்.
இதன்போது இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேசத்தினால் புரிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் இலங்கை, சர்வதேசத்துக்கு நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் ஜெனீவாவின் நோக்கத்தை திசைதிருப்பமுடியும் என்று ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக