வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக முறைப்பாடு..!!!

முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன கடமையாற்றிய காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தோதய மாதிரி பாடசாலை அமைப்பதற்காக உரிய விலை மனுக் கோரல்கள் பின்பற்றப்படவில்லை எனவும், பாரியளவில் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


கணனி மென்பொருள் கொள்வனவு செய்வதற்காக 4000 மில்லியன் ரூபா வரையில் செலவிடப்பட்டுள்ளது.

கற்பனை செய்து பார்க்க முடியாதளவு பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு திட்டங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக