திங்கள், 2 பிப்ரவரி, 2015

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் எதிர்க்கட்சித் தலைவர்..!!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் திகதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு.

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலம் சுதந்திரக் கட்சிக்கே காணப்படுகின்றது.

தேவை ஏற்பட்டால் எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட முடியும். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும்.


நாடாளுமன்றினுள்ளும் வெளியேயும் ஆக்கபூர்வமான முறையில் கட்சியை விமர்சனம் செய்யும் உரிமையை ஜனாதிபதி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

நூறு நாள் திட்டத்தை அமுல்படுத்தவோ அல்லது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்தவோ சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமானது.

திட்டங்களை அமுல்படுத்த சுதந்திரக் கட்சி வழங்கி வரும் ஒத்தழைப்பிற்கு அரசாங்கமும் பொதுமக்களும் நன்றி பாராட்ட வேண்டும்.

தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதி கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் அழுத்தங்கள் குறித்து நாடாளுமன்றின் ஊடாக அம்பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக