திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 லட்சம் ரூபாவை செலவிட்ட மீரிகம பிரதேச சபை..!!!

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக, மீரிகம பிரதேச சபை  35 லட்ச ரூபா பணம் செலவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

35 லட்சம் ரூபாவிற்கு மஹிந்தவின் உருவப் படத்தை அச்சிட்டு அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

உரிய விலை மனுக் கோரல் விதிமுறைகள் பின்பற்றப்படாது அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் பொது நிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அப்பியாசக் கொப்பி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக