முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பயன்படுத்திய ஐந்து அதி சொகுசு வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பம்பலப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு அதி சொகுசு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மற்றுமொரு ஜீப் வண்டி மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவின் ஆலோசனைக்கு அமைய குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக