திங்கள், 2 பிப்ரவரி, 2015

நாளையும் மற்றும் நாளை மறுதினங்களில் மதுபான கடைகள் மூடப்படும்..!!

பௌர்ணமி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சகல மதுபான கடைகளும் மூடப்பட உள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாட்டின் சகல கலால் திணைக்கள பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என வசந்த ஹபுவாரச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக