சனி, 14 பிப்ரவரி, 2015

சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பை ஏற்குமாறு பைசர் முஸ்தபாவுக்கு அழுத்தம்..!!

ஜனாதிபதி மைத்ரியினால் வழங்கப்படவுள்ள சுற்றாடல் அமைச்சையாவது பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு, ரமதா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பைசர் முஸ்தபாவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சின் கீழ் வந்த பல நிறுவனங்கள் அமைச்சர் அர்ஜுனவின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னணியிலேயே பைசர் முஸ்தபா பதவி விலகியதாக சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது அமைப்பு பைசர் முஸ்தபாவின் தலைமையின் கீழ் கடந்த இரு வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதாக  தெரிவித்துள்ளனர்.


இச்சந்திப்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம். மன்சில், குருநாகல் நகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார் மற்றும் கொலன்னாவை நகர சபை உறுப்பினரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக