இலங்கை வந்துள்ள பாப்பரசர் நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்கையில், அவரைச் சந்தித்து, காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோருவதற்காக காணாமல் போயுள்ளவர்களின் குடும்பத்தினர் வவுனியாவில் இருந்து மடுவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
காணாமல் போயிருப்பவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு எண்ணற்ற தடவைகள் இலங்கை அரசாங்கத்திடமும், முன்னாள் ஜனாதிபதியிடமும் தாங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் எதுவித பதிலும் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
அதேபோன்று ஐநா மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாங்கள் தமது கோரிக்கையை முன்வைத்ததாகவும், ஆயினும் பயனேதும் ஏற்படாத நிலையில், இலங்கை வந்துள்ள பாப்பரசரிடம் தமது கோரிக்கையை முன்வைத்து மன்றாடுவதற்காகத் தாங்கள் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மடுத்திருப்பதிக்கு விசேட உலங்கு வானூர்தி மூலமாக வருகை தரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், அங்கு நடைபெறும் விசேட பூஜையில் கலந்து கொள்வார்.
மடுத்திருப்பதியில் ஒரு மணித்தியாலம் தங்கியிருக்கும் பாப்பரசர் அங்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் யுத்தத்தினால் அவயவங்களை இழந்தவர்கள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் போன்றோரையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக