மத்திய வங்கியின் இடைக்கால ஆளுநராக ஊழியர் நம்பிக்கை நிதியம், வர்த்தக வங்கிகளின் முன்னாள் தலைவர் தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்படவுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும், இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் மஹேந்திரா, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் வந்து குறித்த பதவியைப் பொறுப்பேற்கும் வரைக்குமான இடைக்காலத்தில் தினேஷ் வீரக்கொடி இப்பதவியை வகிப்பார் என தெரிய வருகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் ராஜினாமா செய்ததையடுத்து, இலங்கையின் சர்வதேச வங்கியாளரான அர்ஜூன் மஹேந்திரா பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் மஹேந்திரா, ரணில் விக்ரமசிங்க முன்னர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக