செவ்வாய், 13 ஜனவரி, 2015

அரச நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்து வந்த இராணுவ அதிகாரிகள் அதிரடி நீக்கம்..!!

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வந்த இராணுவ அதிகாரிகள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர். புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வந்த சகல இராணுவ அதிகாரிகளையும் அந்தப் பதவிகளிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பதவி வெற்றிடங்கள் சிவிலியன்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

இந்தப் பதவிகளில் காணப்பட்ட இராணுவ தன்மையை நீக்குவதே இவ்வாறு சிவிலியன்கள் அந்தப் பதவி வெற்றிடங்களுக்காக நியமிக்கப்பட உள்மைக்கான பிரதான காரணமாகும்.


கடந்த அரசாங்கத்தின் கீழ், அரச சேவை இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்த முகாமைத்துவம், நகர அபிவிருத்தி, புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரச நிறுவனங்களில் உயர்பதவிகளை கடந்த காலங்களில் இராணுவ அதிகாரிகள் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இராணுவ அதிகாரிகள் வகித்து வந்த பதவிகள் சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக