முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குடும்பத்துடன் சீனாவிற்கு பயணித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களுடன் பந்துல குணவர்தன சீனா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் சீனா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை பிற்பகல் அளவில் பந்துல குணவர்தன மற்றும் குடும்பத்தினர் சீனாவிற்கு பயணித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்குச் சொந்தமான யூ.எல். 868 ரக விமானத்தில் பந்துலவும் குடும்பத்தாரும் பயணித்துள்ளனர்.
சீனாவிலேயே தங்கி விடுவார்களா அல்லது நாடு திரும்புவார்களா என்பது பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான பந்துல குணவர்தன மீது பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக