திங்கள், 12 ஜனவரி, 2015

அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவர் வாகன விபத்தில் பலி..!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்தி வந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது - 27) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து வந்த சுன்னாகம் சிவன் கோவிலடியைச் சேர்ந்த தி.பிரகாஷ் (வயது 23) என்பவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குறித்த நபர் தனது நண்பர்களுடன் 'தல்செவன' விடுதிக்குச் சென்று ஞாயிறு விடுமுறையைக் களித்து விட்டு திரும்பிய சமயமே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக