சனி, 31 ஜனவரி, 2015

நுரைச்சோலை அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகளின் போது 3302 கோடி ரூபா மோசடி..!!!

நுரைச்சோலை மின் நிலைய நிர்மாணப் பணிகளின் போது கடந்த அரசாங்கம் 3302 கோடி ரூபா நிதி மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போதைய பிரதி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரும் இணைந்து இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஊழல் தவிர்ப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்த சகல தகவல்களும் எம்மிடம் உண்டு. இது தொடர்பில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும்.

இந்த மொத்த தரகுப் பணம் 1716 கோடி மற்றும் 1586 கோடி என்ற அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது.



சீன நிறுவனமொன்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உற்பத்தி செய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டமைக்காக டி சில்வா என்பவருக்கு இந்த மொத்த தரகுப் பணத்தையும் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என வசந்த சமரசிங்க நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக