திங்கள், 15 நவம்பர், 2010

குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குவைத் சென்று பாதிக்கப்பட்ட பணிப்பெண்..!

மூன்று மாதங்களாகச் சம்பளம் எதும் வழங்காமல் வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் ஒருநாள் திடீரெனத் தாக்கி கையில் சிறு கம்பிகளை ஏற்றியதாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் மீனாட்சி லட்சுமி தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தக் கவலையில் நான் தனியாக அழுது கொண்டிருந்தபோது அங்குவந்த வீட்டு உரிமையாளர் முகத்தில் துணியொன்றைப் போட்டு கீழே வீழ்த்தினார். அதன் பின்னர் அங்கு வந்த அவரின் மனைவி கையில் வைத்திருந்த சிறு கம்பிகளை ஏற்றினார். கதறி அழஅழ கம்பி ஏற்பட்டது எனத் துக்கத்துடன் கூறியுள்ளார் லட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இச்சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர்; அந்த வீட்டிலிருந்து வெளியேறி 3 மாதங்கள் குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் தங்கியிருந்ததாகக் கூறியுள்ளார். அங்கிருந்து வீட்டைத் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை யென்றும் தெரிவித்தார். பின்னர் நவம்பர் 11ம் திகதி இலங்கை திரும்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் லட்சுமி கூறினார். இவருடைய இடது கையிலிருந்து 8 சிறிய கம்பிகளும் காலிலிருந்து ஒரு கம்பியும் வெளியேற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக