சனி, 31 ஜனவரி, 2015

பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஐக்கிய தேசியக் கட்சி..!!!

பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் நூறு நாள் செயற்றிட்டத்தின் பின்னர் தேர்தலுக்கு தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாக உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

வெற்றிடமாகியுள்ள கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள், கட்சிக் கிளை அலுவலகங்கள் அங்குரார்ப்பணம் செய்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.



பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமிற்கு பிரதமர் ரணில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக