சேவை மூப்பின் அடிப்படையிலேயே பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசராக, சிரேஸ்ட நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்பட்டமை சேவை மூப்பின் அடிப்படையிலாகும்.
நீதியரசர் சிறிபவனே இன்று நாட்டில் சேவையாற்றி வரும் நீதியரசர்களில் சிரேஸ்டமானவர்.
அரசியல் அமைப்பு திருத்தங்களின் பின்னர் பிரதம நீதியரசர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அதுவும் சேவை மூப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
ஓய்வு பெற்ற நீதவான்களின் குழு ஒன்றை அமைத்து பிரதம நீதியரசர் நியமனம் குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்ட விதம் பிழையானது என ராஜித சேனாரட்ன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக