வியாழன், 25 டிசம்பர், 2014

அரச ஊடகங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் ஐ.தே.க கோரிக்கை..!!!

இலங்கையின் அரசாங்க ஊடகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசாங்க ஊடகங்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதில் தேர்தல்கள் ஆணையாளர் தோல்வி கண்டுள்ளார்.

எனவே தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அந்தக்கட்சி கேட்டுள்ளது.

நடைமுறை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை தொடர்ந்தும் மீறிவருகின்றமை வியப்பை அளிக்கிறது.


மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டைக்கூட நேற்று அரசாங்க ஊடகம் நேரடி ஒளிபரப்பு செய்தது அத்துடன் தனியார் ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின.

அதேநேரம், இந்த ஒளிபரப்பின் பின்னர் பல பாடல்கள் கட்டணம் செலுத்தப்படாமலேயே ஒளிபரப்பப்பட்டன என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவின் பழைய உரைகள் அடங்கிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை தேர்தல்கள் ஆணையாளர் தடை செய்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நேரடி ஒளிபரப்புக்களை தடுப்பதில் தேர்தல்கள் ஆணையாளர் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக