வியாழன், 25 டிசம்பர், 2014

கிராமங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை..!!!

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும்கட்சியின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று அனுராதபுரத்தில், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 16 பேர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

சீதாவாக்கை பிரதேசசபையின் ஐந்து உறுப்பினர்களும், மற்றும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் 8 உறுப்பினர்களும், வடமத்திய
மாகாணசபை உறுப்பினர் பி.பி.திசநாயக்கவும், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் இணைந்துள்ளனர்.

அதேவேளை, கண்டியில், சிறிலங்கா பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் இணைப்புச்செயலாளரும், ஐதேகவில் இணைந்து கொண்டுள்ளார்.

எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் நிலையில், ஆளும்கட்சியின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மெல்ல மெல்ல மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கிராமங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக