எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
நாட்டின் பல அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஐந்து லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து நாநூற்று முபத்துரெண்டு பேர் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்றும் நாளையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இந்தக் காலப்பகுதியில் எந்தவிதமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சுயாதீனமான முறையில் வாக்களிக்க முடியும் எனவும் சீ.சீ.ரீ.வி கமராக்கள் அல்லது வேறும் வீடியோ கமராக்களின் மூலம் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பது பற்றி கண்காணிக்கப்படக் கூடாது எனவும், அவ்வாறு கண்காணிக்கப்பட முடியாத இடத்திலிருந்து வாக்களிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக