தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் பொலிஸ் நிலையங்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சிலரிடம் சட்டவிரோத ஆயுதங்கள் பல இருப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோத ஆயுதங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் உயிர் பலிகளோ ஆயுத பயன்பாடோ இடம்பெறுவதனை தவிர்க்கும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றி தேடுதல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் உண்டா என சோதித்தல், திடீர் சோதனைகளை நடாத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சட்டவிரோத
ஆயுதப் பயன்பாட்டை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக