வெல்லம்பிட்டிய - உமகிலிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி சேதப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் கடமையை செய்ய தவறிய காரணத்தினால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸார் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று காலை
அறிவித்திருந்த நிலையில், தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன் ஒருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்று நள்ளிரவு ஒரு குழுவினர் தேர்தல் பிரச்சார மேடையை நோக்கியும் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் 15 முதல் 20 வெற்று துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக