வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஜனாதிபதி வருகையின் போது ஏற்பாடுகளை மேற்கொள்ள அரச அதிகாரிகளை பயன்படுத்தும் ஆளுநர்..!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ். வருகையின் போது ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ள வடக்கில் ஆளுநரினால் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எதிர்வரும் 2ம் திகதி ஜனாதிபதி வடக்கிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த ஜனாதிபதி வருகையின் போது ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ள வடக்கில் ஆளுநரினால் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


வடக்கின் 5மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த எதிர்வரும் 2ம் திகதி வடக்கிற்கு வருகை தரவுள்ளார்.

குறித்த வருகைக்காக வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் ஒழுங்கமைப்புக்கள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குறித்த ஒழுக் கமைப்புக்களுக்காக ஆளுநரின் விசேட பணிப்பின் பெயரில், மாவட்டச் செயலக மற்றும் மாகாணசபைக்குட்பட்ட திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் பலர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இதே ஆளுநர் வடமாகாணசபை தேர்தலிலும் வெளிப்படையாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பிரச்சார மேடைகளிலும் வெளிப்படையாகவே தோன்றி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலிலும் அவர் தனது பங்கினை செலுத்தும் வகையில் அரசாங்க திணைக்கள ஊழியர்கள், திணைக்கள வாகனங்கள் பயன்படுத்த முழு அளவிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இம்முறை படையினர் மற்றும் பொலிஸாரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் உச்சளவில் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக