ஞாயிறு, 21 டிசம்பர், 2014

அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை மேர்வின்..!!!

அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் எதிர்க்கட்சிக்கு செல்லப் போவதில்லை என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இதன்போது தாம் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக மேர்வின் தெரிவித்தார்.

தாம், அமைதியாக இருப்பதை கண்டு சிலர் எதிர்க்கட்சிக்கு மாறப் போவதாக கூறுவதாகவும் மேர்வின் குறிப்பிட்டார்.


இதேவேளை தமது மகன் வெளிநாட்டு தம்பதியினரை தாக்கிய சம்பவத்தை அடுத்து மேர்வின் அரசியலில் அதிக அக்கறை கொள்ளாதவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக