யாழ். வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 25,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் சார்பாக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதில் கலந்துகொண்டிருந்ததுடன்,
புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் மேற்படி விளையாட்டு உபகரணங்களை வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினரிடம் கையளித்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக