வெள்ளி, 26 டிசம்பர், 2014

இலங்கையின் முதலாவது சுனாமி பேரலை அனர்த்த நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகள்.!!(படங்கள் இணைப்பு)



இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா, பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலக்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமிப் பேரலையின் 31ஆம் நாள் நினைவாக 26.01.2005 ஆம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவிலே நிறுவப்பட்ட நினைவுத் தூபியில் 10ஆம் ஆண்டு நினைவு நாள் பிரார்த்தனையும் அஞ்சலிக் கூட்டமும்  இன்றையதினம் காலை 9.25 முதல் நரசிங்கர் ஆலய பரிபாலன சபைத் தலைவரின் தலைமையில் ஆரம்பமானது.

இவ் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள்,  வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவசக்தி ஆனந்தன், கௌரவ வினோ,வவுனியா மாவட்ட அரச அதிபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வட மாகாண சுகாதார அமைச்சர்  திரு ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான திரு சிவமோகன், திரு இந்திரராஜா, திரு தியாகராஜா, திரு லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் திரு சேனாதிராஜா, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளின் முகாமையாளர்கள், வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு எஸ்.இராசலிங்கம்,சர்வதேச இந்து மத பேரவையின் தலைவர் திரு சிவகஜன், கோவில்குளம் இளைஞர் கழக தலைவர் திரு சு.காண்டீபன், கழக உப செயலாளர் திரு கேசவன், கழக பொருளாளர் நிகே, உறுப்பினர் சஞ்சீ,  மற்றும் சமூக ஆர்வலர்கள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 26.12.2014 அன்று விடிகாலைப் பொழுதில் கடல் தாய் பேரலையென சீற்றம் கொண்டு கோரத்தாண்டவமாடி  ஆயிரம் ஆயிரம் எமது தாயக உறவுகளையும், தென் கிழக்காசிய நாடுகள் வாழ் சகோதரர்களையும் காவுகொண்ட துயரம் இப்போதும் கூட எமது மனங்களை கனக்க வைக்கிறது. 

அன்றைய சுனாமிப் பேரலையின் வெறியாட்டத்தில் காவுகொள்ளப்பட்ட உயிர்களையும் நமது உறவினர்களையும் நம் நெஞ்யில் ஒரு கணம் நிறுத்தி அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனைகளும், பிரமுகர்களின் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது.

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக