ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மைத்திரிபாலவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு பேராசிரியர் கோரிக்கை...!!

மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்ற வாக்கியம் நேரடியாக சேர்க்கப்படாவிட்டால், மைத்திரிபாலவுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பேராசிரியர் குமார் டேவிட், இந்தக் கோரிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினரிடமும் மைத்திரிபாலவை ஆதரிக்கும் ஏனைய தரப்பினரிடமும் விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி வழங்கப்படவில்லை. என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதனை ஒரு காட்டிக் கொடுப்பாகவே தாம் கருதுவதாக குமார் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கும் தரப்புக்கள் மத்தியில் இணக்கமின்மை நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக