பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் திகதிகளும் விடயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 10 - புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
ஜனவரி 11 - ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் உள்ளடங்கிய 25க்கு கூடாத அமைச்சரவை ஒன்று அமைக்கப்படும்.
ஜனவரி 12 - தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்துக் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தேசிய ஆலோசனை சபை அமைக்கப்படும்.
ஜனவரி 19 - நாடாளுமன்றம் கூட்டப்படும்.
ஜனவரி 20 - அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் வகையில் நிலையியல் கட்டளை சட்டம் திருத்தப்படும்.
ஜனவரி 21 - நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கைகள்.18வது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்,
ஜனவரி 25 - சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஜனவரி 28 - நடைமுறையில் உள்ள விருப்புத் தெரிவு வாக்களிப்பு துறை ரத்துச் செய்யப்படுவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
ஜனவரி 29 - பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்க்கை செலவை குறைத்தல் தொடர்பி;ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஜனவரி 30 - சம்பள அதிகரிப்பு, நேரடி மறைமுக வரிகள் நீக்கப்படும்.
பெப்ரவரி 2 - பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கு ஒழுக்கக்கோவை அறிமுகப்படுத்தப்படும்.
பெப்ரவரி 4 - நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் இறைமையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
பெப்ரவரி 5 - நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பெப்ரவரி 6 - தேசிய ஒளடத கொள்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
பெப்ரவரி 18 - சுயாதீனக் குழுக்கள் நிறுவப்படும்.
பெப்ரவரி 19 - தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 3 வாரங்களில் அது நிறைவேற்றப்படும்.
பெப்ரவரி 20 - தகவல்களை தெரிந்து கொள்ளும் சடடமூலம் அறிமுகப்படுத்தப்படும்.
மார்ச் 2 - புதிய தேர்தல் சட்டங்கள் தயாரிக்கப்படும். அது அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
மார்ச் 17 - தேர்தல் முறைகளில் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
மார்ச் 18 - தேசிய ஒளடத கொள்கை நிறைவேற்றப்படும்.
மார்ச் 19 - தேசிய கணக்காய்வு கொள்கை நிறைவேற்றப்படும்.
மார்ச் 20 - தகவல்களை தெரிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மார்ச் 23 - நியமனங்களுக்கான அரசியல் சபை அமைக்கப்பட்டு சுயாதீனக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்படும்.
ஏப்ரல் 20 - நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்காக நாடாளுமன்ற முறை நிறுவப்படும்.
ஏப்ரல் 23 - நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதனையடுத்து காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும்.
இதன்படி அதிக ஆசனங்களை பெற்ற கட்சியின் சார்பில் பிரதமர் நியமிக்கப்படுவார்.
அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை பெற்றவர் பிரதி பிரதமராக நியமிக்கப்படுவார்.
இந்த பதவிகளின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்று 2 வருடங்களுக்கு நிறுவப்படும்.
இதன் கீழ் தேசிய கொள்கைகள் மற்றும் சவால்கள் வெற்றி கொள்ளப்பட்டு அரசியல் கலாசாரம் நிறுவப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக