சனி, 20 டிசம்பர், 2014

யாழ்.சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர் இந்திய அதிகாரி..!!

இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி இதனை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் இந்திய மீனவர்கள் 81பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடல்எல்லையை தாண்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்கள் 30பேரை விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையிலேயே
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக