சனி, 20 டிசம்பர், 2014

மட்டக்களப்பில் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம் ஒலிபெருக்கிக் கம்பம் விழுந்ததில் 7 பேர் காயம்..!!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு – காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நிகழ்வில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்த கம்பம் சரிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்தவர்களில் சிறுவர் ஒருவர் காத்தான்குடி தாள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் எனைய 6 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,


இன்று மாலை ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இன்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர் மீதே இவ்வாறு ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்த கம்பம் சரிந்து விழுந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக