புதன், 5 நவம்பர், 2014

நாம் புலிகளைப் பற்றி பேசவில்லை மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியே பேசுகிறோம் சம்பந்தன்..!!

வட மாகாணசபை அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.

இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றியுள்ளனர். இந்தக் காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு வர அனுமதிக்காமை காரணமாக அவர்களுக்கு உண்மைத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்தமை குறித்து நாம் பேசவில்லை. சிவில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியே நாம் குறிப்பிடுகின்றோம்.

போரின் பின்னர் இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாமை காரணமாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச விசாரணைகளை நடத்துகின்றன.

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக