நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் பற்றி இன்று பேசப்படுகின்றது. எனினும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தை பின்பற்றுவதில்லை.
இவ்வாறான ஓர் நிலைமையில் மக்களை எவ்வாறு சட்டத்தை மதிப்பவர்களாக மாற்ற முடியும்?
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது.
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டமும் பெரும்பான்மை மக்களுக்கு மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான இரட்டை நிலைப்பாடு நாட்டில் மீளவும் பிரச்சினைகளை கிளர்ச்சிகளை உருவாக்க வழியமைக்கும் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக