வெள்ளி, 7 நவம்பர், 2014

அவுஸ்ரேலியா சிட்னியில் பதவிச் சண்டையில் தமிழ் முதியோர்கள்..!!

அவுஸ்ரேலியாவில் முதியோர் சங்கத்தில் ஏற்ப்பட்ட பிளவு காரணமாக இரண்டு குழுக்களாக பிரிந்து பதவிக்காக சண்டை போடும் நிலை உருவாகி உள்ளது.
அண்மையில் நடக்க இருக்கும் இவர்களது தேர்தல் தொடர்பாக இரண்டு குழுக்களுக்கும் இடையில் மிகவும் பாரதுரமான குற்ற சாட்டுக்களை அவுஸ்ரேலியா SBS தமிழ் வானொலியில் முன்வைத்திருந்தனர்.

இவர்கள் குறிப்பாக சமுகத்துக்கு செய்தது என்ன?

இவர்களால் சமூகத்துக்கு செய்ததை ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

இதை நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது, குறிப்பாக தற்போதுதான் தெரிகின்றது. அவுஸ்ரேலியாவில் இவர்களுக்கும் ஒரு அமைப்பு இருக்கின்றது என்று.

புகலிடம் கோருபவர்களின் விடயத்தில் பல வெள்ளையர்கள் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் காட்டிய போது அகதிகள் விடயத்தில் இவர்கள் தூங்கிக் கொண்ட இருந்தார்கள்.


தமிழர்கள் மட்டும் ஏன் இந்த பதவிகளுக்கு அடிபடுகின்றார்கள் என்று புரியவில்லை பதவி படும் பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக