வெள்ளி, 7 நவம்பர், 2014

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு கமல் தவிர எந்த ஹீரோவும் குரல் எழுப்பலையே..!!!

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்ததைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் விஜய், மீனவர்கள் தூக்கு பற்றி எந்த வித எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை பிரச்சினை, இணையதளத்தில் ஜெ.பற்றி அவதூறு செய்தி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை என எதற்கெடுத்தாலும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தும் நமது தமிழ் சினிமா ஹீரோக்கள் மீனவர்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக