புதன், 5 நவம்பர், 2014

நாட்டின் பொருளாதர வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது துமிந்த சில்வா..!!

எதிர்க்கட்சியினர் இலங்கையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் நாட்டை ஆபிரிக்காவில் உள்ள வறிய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்ட போதிலும் மகிந்த சிந்தனை கொள்கையில் உள்ள தூரநோக்கு பார்வை காரணமாக நாட்டின் பொருளாதர வளர்ச்சி வேகம் 7.08 வீதமாக அதிகரித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு நகரில் 60 ஆயிரம் வீடுகளை இரண்டு கட்டங்களாக நிர்மாணித்துள்ளார்.


ஆனால், எதிர்க்கட்சியினர் கொழும்பு நகரில் சேரிப்புறங்களில் வாழும் மக்களுக்கு பொய்களை கூறி அவர்களை தவறாக வழி நடத்தினர்.

இதன் மூலம் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் லாபத்தை பெற முயற்சித்தனர் எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக