புதன், 5 நவம்பர், 2014

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு போக்குவரத்து பாதிப்பு..!!

நுவரெலியாவில் இன்று காலை தொடக்கம் கடும் பனிப்பொழிவு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய வானிலை காரணமாக இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் அடர்த்தியான கடும் பனிப்பொழிவு காரணமாக எங்கும் இருள் சூழ்ந்தது போன்ற நிலை காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையே ஹட்டன் - நுவரெலியா பாதையில் நானுஒய மற்றும் நுவரெலியாவில் பங்களாவத போன்ற பகுதிகளில் பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக