வெள்ளி, 7 நவம்பர், 2014

போராளிக் குழுக்களுடன் இணையச் சென்ற மாலைதீவு பிரஜைகள் இலங்கையில் கைது..!!

சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்வதற்காக சென்ற மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டனர்.

25 மற்றும் 23 வயதான இரண்டு இளைஞர்களும் ,18 வயதாக யுவதியுமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் செயற்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மருத்துவ நோக்கத்துக்காக இலங்கைக்குள் வந்ததாக அவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த மூவரில் 23வயதான இளைஞரும் ,18 வயதான யுவதியும் சட்டபூர்வமற்ற முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் குறித்த பெண் தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் விசராணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக