வெள்ளி, 7 நவம்பர், 2014

மஹிந்தவின் முட்டாள்தனம் பற்றி ரணில் விளக்கம்..!!

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழக்கொன்றை தாக்கல் செய்யாது, உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை தீர்ப்பை கோரியிருப்பது பெரிய முட்டாள்தனம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தான் மகிந்த ராஜபக்ஷ இடத்தில் இருந்திருந்தால் அப்படியான கேள்வியை கேட்டிருக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் கருத்து கேட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தனக்கு 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு நுகேகொடையில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார். அவர்  மேலும் தெரிவிக்கையில்,


அரசியலமைப்புச் சட்டத்தின் 129 வது சரத்துக்கு அமைய ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் மீண்டும் போட்டியிடலாமா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.

நான் மகிந்த ராஜபக்ஷவாக இருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டேன்.

போட்டியிட முடியாமைக்கான காரணத்தை முன்வைக்குமாறு சரத் என் சில்வா போன்றவர்களுக்கு நான் சந்தர்ப்பம் கொடுத்திருப்பேன்.

என்னால் போட்டியிட முடியும் என்பதே என நிலைப்பாடாக இருக்கும். எனினும் மகிந்த ராஜபக்ஷ, சரத் என் சில்வா பிரச்சினையை கிளப்பும் முன் அவரை தன்னால் போட்டியிட முடியுமா என உயர்நீதிமன்றத்தின் கருத்தை வினவியுள்ளார். இது முட்டாள்தானமான வேலை இது செல்லுப்படியற்றது எனவும் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக