வெள்ளி, 7 நவம்பர், 2014

மீரியாபெத்தையில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இந்தியாவில் கல்வி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் உறுதி..!!

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய வம்சாவளிகள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்திய கண்டி உதவி உயர்ஸ்தானிகர் ஏ நடராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று மீரியாபெத்த அனர்த்த இடத்துக்கு விஜயம் செய்த அவர்ää அங்குள்ள மக்களை கண்டு ஆறுதல் கூறினார்.

அத்துடன் பதுளை மாவட்ட அரசாங்க அதிபருடன் அவர் நிலைமைகளை ஆராய்ந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்ää மண்சரிவின் பின்னர் அயல்நாட்டு உதவிகள் அவசியம் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும் இந்திய வம்சாவளிகள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உண்டு.

எனவே இலங்கை கோரியுள்ள அவசர உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.


இந்தநிலையில் ஏற்கனவே இந்தியாவின் வீடமைப்பு திட்டங்களில் 2000 வீடுகள் பதுளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் சில வீடுகளை மீரியாபெத்தைக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

அதிலும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீடுகளை கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளமையால் அதனைப்பொறுத்தும் தீர்மானங்கள் அமையும்.

இதனை தவிர பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் கல்வியை தொடர இந்தியா நிச்சயம் உதவியளிக்கும்; என்றும் நடராஜன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக