புத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி கண்டி நகரில் உள்ள மரம் ஒன்றில் ஏறி ஒருவர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான இந்த நபர் கண்டி குளம் அமைந்துள்ள பகுதியின் சுற்று வட்டத்தில் இருக்கும் 50 உயரமான மரத்தில் ஏறியே அமர்ந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்த பகவானின் உருவத்தை வர்த்தக பொருளாக பயன்படுத்தி, செய்தித்தாள்கள், நாட்காட்டிகள், வெசாக் வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்திய போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நபர் கூறியுள்ளார்.
உரிய அதிகாரி ஒருவர் வந்து தன்னிடம் சரியான தீர்வை வழங்கும் வரை தான் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக