வவுனியா, இலுப்பையடி பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றினை உடைத்து அங்குள்ள பொருட்களை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் எஸ்.பி.ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, இலுப்பையடியில் உள்ள தொலைத் தொடர்பு நிலையம் ஒன்று கடந்த வாரம் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஐபோட், தொலைபேசிகள், கெற்போன்கள், சார்ஜர்கள், என இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது உடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதாற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சப் இன்ஸ்பெக்டர் எஸ்.பி.ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த எஸ்.பி.ராஜபக்ஸ, தென்னக்கோன், குமாரசிங்க, புத்திக, செனரத், ஜெயபிரகாஸ், கருணாதிலக ஆகிய பொலிசாரே விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞர்களை கைது செய்து பொருட்களை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக