
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் முறையாக போட்டியிடுவது குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் தாம் அதற்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்தால் குறித்த நீதிமன்றமே அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கும். எனவே அதில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பவில்லை என்று தற்போது சரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மாதுலுவேவ சோபித தேரர் மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோரின் வழிகாட்டலில் நியாயமான தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது உறவினர் ஒருவருடன் தாம் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை விடுதியில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தங்கியிருந்ததாக வெளியான செய்தியை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க சில நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியி;டம் 2015 ஏப்ரல் வரையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டாம் என்று கோரியுள்ளனர்.
அவ்வாறு நடத்தினால் தமது ஓய்வூதிய கொடுப்பனவுகளை இழக்கநேரிடம் என்பதே அவர்களின் ஆதங்கமாகும்.
அதேநேரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவிடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
2016ம் ஆண்டு வரை பொதுத்தேர்தலை நடத்தாவிட்டால் தாம் அவருக்கு ஆதரவு தருவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக