
அரசாங்க கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே இந்த திட்டம் அவசரமாக முன்னெடுக்கப்பட்;டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 150 விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புரையின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 450 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 80 வீதமான
வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி 112 அபிவிருத்தி யோசனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அதில் 32 மாத்திரமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 80 திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதில் 77 திட்டங்களே புதிய திட்டங்களாக 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக