எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க அரசாங்கம் எண்ணியிருப்பதால், தேர்தலை அறிவிப்பது சட்ட ரீதியானதா என்பதை அறிய இன்று உயர்நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரவிருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிப்பார் எனவும் அமைச்சர் அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக