வெள்ளி, 7 நவம்பர், 2014

ஏ9 வீதியில் அதிக வேகம் வேண்டாம் சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்தல்..!!

ஏ9 வீதியில் வாகனங்களை அதிகவேகத்தில் செலுத்த வேண்டாம் என்று பொலிஸார் சாரதிகளை கேட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்கள் மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் அதிக வேகமாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதிப் பகுதியிலேயே விபத்துக்கள் காரணமாக அதிக மரணங்கள் அண்மைக்காலங்களில் சம்பவித்துள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் இந்தப் பகுதியில் 30 வாகன விபத்து மரணங்கள் சம்பவித்துள்ளன.


கடந்த புதன்கிழமையன்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக