முன்னாள் இராணுவத் தளபதியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது கடவுச்சீட்டை ஒரு லட்சம் ரூபா பணய தொகையை பெற்று விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் நல குறைவுக்கு சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்ல வேண்டியிருப்பதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிபதி அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பொன்சேகா எதிர்வரும் 20ம் திகதி வரை சிங்கப்பூரில் சிகிச்சை பெறவுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக